உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 27 Sep 2017 11:27 PM GMT (Updated: 27 Sep 2017 11:27 PM GMT)

* அமெரிக்காவில் அக்டோபர் 1-ந் தேதி தொடங்க உள்ள நிதி ஆண்டில், 45 ஆயிரம் அகதிகளை சேர்த்துக்கொள்ள டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.



* ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து 6 ராக்கெட்டுகள் விழுந்தன. அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் அங்கு சென்றிறங்கிய சிறிது நேரத்தில் இந்த ராக்கெட்டுகள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் உயிரிழப்பு ஏதும் இல்லை.

* வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பித்தப்பை அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் குணம் அடைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா முழு அளவில் தயாராக உள்ளது என அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் அப்படி எடுத்தால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் என அவர் எச்சரித்துள்ளார்.

* படங்களை பிரதானமாக கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புத்தகம் (காபி டேபிள் புத்தகம்), அமெரிக்காவில் வாஷிங்டனில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை ‘சுலாப் இன்டர்நேஷனல்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் எழுதி உள்ளார்.

* நைஜீரியாவில் திக்வா நகரில் உள்ள மசூதி அருகே நேற்று முன்தினம் பெண் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.


Next Story