இரவோடு இரவாக ரோட்டை திருடி விற்ற மகா கெட்டிக்காரன் கைது


இரவோடு இரவாக ரோட்டை திருடி விற்ற மகா கெட்டிக்காரன் கைது
x
தினத்தந்தி 3 Feb 2018 6:48 AM GMT (Updated: 3 Feb 2018 6:48 AM GMT)

இரவோடு இரவாக ரோட்டில் உள்ள 500 டன் கான்கீரிட் கலவையை உடைத்து திருடி விற்ற மகா கெட்டிக்காரனை போலீசார் கைது செய்தனர்.

ஷாங்காங்

சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் சாங்கேசு என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் வழியாக செல்லும் 800 மீட்டர் நீள ரோடு இரவோடு இரவாக திடீரென மாயமானது. சிமெண்ட் கான்கிரீட்டால் போடப்பட்ட அந்த சாலையை யாரோ ஒரு மர்ம நபர் வெட்டி பெயர்த்து எடுத்து சென்று விட்டான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் ‘ஷிகு’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபர் இந்த ரோட்டை வெட்டி எடுத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

அந்த ரோட்டின் 500 டன் கான்கிரீட் கலவையை உடைத்து நொறுக்கி அதை விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை ரூ.50 ஆயிரத்துக்கு விற்று இருக்கிறார். எனவே இவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story