உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 26 April 2018 12:00 AM GMT (Updated: 25 April 2018 8:25 PM GMT)

* பாகிஸ்தான் நாட்டில் வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படைகள் நடத்திய தாக்குதலில் 6 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

* பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா நகரில் போலீசார் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமான இசைக் கலைஞர் ரிச்சர்டு வாக்னர். இவர் தங்கள் கலாசாரத்தில் யூதர்கள் உண்டாக்கக்கூடிய பாதிப்பு குறித்து எச்சரித்து, பிரெஞ்சு தத்துவவியலாளர் எட்வொர்டு ஸ்க்யூரே என்பவருக்கு கடந்த 1869-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதம் இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்த கடிதம் 34,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.

*மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தி செல்லப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதும், அவர்களது உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதும் தற்போது தெரியவந்து உள்ளது. இது மெக்சிகோ முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அங்கு ஆர்ப்பாட்டங்களும், கண்டன பேரணிகளும் நடைபெற்றன.

* எகிப்து நாட்டின் அலெக்ஸ்சாண்டிரியா நகரில் நடந்த சாலை விபத்தில் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிர் இழந்தாகவும், 8 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.

Next Story