உலக செய்திகள்

வர்த்தக விவகாரம் தொடர்பாக சீனா சென்று திரும்பும் அமெரிக்க அதிகாரிகளை டிரம்ப் இன்று சந்திக்கிறார் + "||" + Trump says to meet Saturday with trade officials back from China

வர்த்தக விவகாரம் தொடர்பாக சீனா சென்று திரும்பும் அமெரிக்க அதிகாரிகளை டிரம்ப் இன்று சந்திக்கிறார்

வர்த்தக விவகாரம் தொடர்பாக சீனா சென்று திரும்பும் அமெரிக்க அதிகாரிகளை டிரம்ப் இன்று சந்திக்கிறார்
சீனா நாட்டுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமெரிக்க திரும்பும் வர்த்தக அதிகாரிகளை இன்று சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். #Trump #TradeOfficials
வாஷிங்டன்,

அமெரிக்க சீனா நாடுகளுக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக சுங்க வரிகளை விதித்து இரு நாடுகளும் வர்த்தக ரீதியாக குற்றம் சாட்டி வந்தன. இவ்வாறு கூடுதல் சுங்க வரி விதிப்பதினால் இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டு மறைமுக வர்த்தக போர் நடந்து வந்தது.

இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்க வர்த்தக அதிகாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சீனா சென்றனர். பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள், அறிவுசார் சொத்துரிமை மற்றும் கட்டாய கூட்டு தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சீனா நாட்டுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமெரிக்கா திரும்பும் வர்த்தக அதிகாரிகளை இன்று சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து டிரம்ப் தனது சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டுருப்பதாவது,

”சீன அதிகாரிகள் மற்றும் பொருளாதார பிரதிநிதிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இன்று நாடு திரும்பும் எங்கள் நாட்டு வர்த்தக அதிகாரிகளை சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பில் நாங்கள் முக்கியமான முடிவுகளை தீர்மானிக்கவுள்ளோம். வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவின் வெற்றியை சீர் குலைப்பது என்பது சீன நாட்டிற்கு கடினமான ஒன்று தான்” என கூறினார்.