பைசா கோபுரம் சாயாமல் நிலைத்து இருப்பது எவ்வாறு ஆய்வாளர்கள் தகவல்


பைசா கோபுரம் சாயாமல்  நிலைத்து இருப்பது எவ்வாறு ஆய்வாளர்கள் தகவல்
x
தினத்தந்தி 10 May 2018 12:05 PM GMT (Updated: 10 May 2018 12:05 PM GMT)

பைசா கோபுரம் சாயாமல் நிலைத்து இருப்பது எவ்வாறு என்பது குறித்து ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

வருடத்திற்கு  10,லட்சத்திற்கு  மேற்பட்ட மக்கள் பார்வையிடும் இந்த பைசா கோபுரம் 1990-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மூடிதான் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை கீழே விழுந்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதாலே பைசா கோபுரம் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் மூடப்பட்டே இருந்தது.

60 மீட்டர் கட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுப்பட்ட  இத்தாலியின் பைசா கோபுரம் ஒரு புறம் 55.86 மீட்டரும் மற்றொரு புறம் 56.67 மீட்டரும் இருந்தது. இதில் 56.67 மீட்டர் இருக்கும் பைசா கோபுரத்தின் பக்கவாட்டில் மண்ணைப் பறித்து எடுத்ததன் மூலம் சாய்ந்து இருந்த கட்டடத்தின் கோணம் சிறிது குறைக்கப்பட்டது. அதாவது 1990 களில் 5.5 டிகிரி என்ற கோணத்தில் சாய்ந்திருந்த கட்டடம் 2001-ம் ஆண்டில், இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம், 3.99 டிகிரி எனக் குறைக்கப்பட்டது. மூடி வைக்கப்பட்டிருந்த பைசா கோபுரம் ஒருவழியாக பார்வையாளர்கள் வசதிக்காக 2001-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டது. 

பைசாவின் சாய்ந்த கோபுரம் எப்பொழுதும் விஞ்ஞானிகளுக்கு ஒரு  மர்மமாகவே இருந்து உள்ளது. 55-மீட்டர் உயரமான கோபுரம் ஐந்து-டிகிரி கோணத்தில் சாய்ந்து போயிருந்தாலும், அது 1280 ஆம் ஆண்டு முதல் நான்கு பூகம்பங்களுக்கு  தப்பிப்பிழைத்து உள்ளது.

இந்த கட்டிடம் எவ்வாறு சாயாமல் உள்ளது என கேட்டால் அதற்கு காரணம் அந்த அப்பகுதியின் மண்ணின் தன்மையாகும்.

இந்த பகுதியில் நிலவும்  டைனமிக் மண்-அமைப்பு  (DSSI) தொடர்பே கட்டடம் சாயாமல் இருப்பதற்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து ஆய்வு நடத்திய பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் துறை,  பேராசிரியர் மைலோனாகிஸ், டெய்லி மெயில் பத்திரிகைக்கு கூறியதாவது:-

முரண்பாடாக, சாய்வான உறுதியற்ற தன்மையை ஏற்படுத்திய அதே மண்  கோபுரம் விளிம்பில்  சரிவை ஏற்படுத்தியது. இது நில அதிர்வு நிகழ்வை தக்கவைத்துக் கொள்ள உதவுவதற்காக கட்டடத்தின் அதிர்வு பண்புகள் கணிசமாக மாற்றியமைக்கபட்டாதால்  எத்தனை பூகம்பம் ஏற்பட்டாலும் அது  கோபுரத்தை பாதிக்காது. எனகூறி உள்ளார்.

1280 ஆம் ஆண்டு முதல் இந்த பிராந்தியத்தைத் தாக்கிய நான்கு பூகம்பங்களால் இந்த கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

Next Story