உலக செய்திகள்

இந்தியா-நேபாளத்துக்கு இடையே கிரிக்கெட் மூலம் நல்லுறவு; பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi bats for cricket for boosting India-Nepal partnership

இந்தியா-நேபாளத்துக்கு இடையே கிரிக்கெட் மூலம் நல்லுறவு; பிரதமர் மோடி

இந்தியா-நேபாளத்துக்கு இடையே கிரிக்கெட் மூலம் நல்லுறவு; பிரதமர் மோடி
கிரிக்கெட்டின் மூலம் இந்தியா-நேபாளத்துக்கு இடையே நல்லுறவை மேம்படுத்த முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். #PMModi
காட்மாண்டு,

பிரதமர் மோடி அண்டை நாடான நேபாளத்துக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அவர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பசுபதி நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ‘இரு நாடுகளுக்கு இடையே அதிக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் மூலம் உறவை மேம்படுத்த முடியும். குறிப்பாக நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது வீரர் சந்தீப் லமிசேன் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மூலமான இந்த செயல்பாடுகளால் நல்லுறவு மேலும் பலப்படும். பொதுமக்கள் தொடர்பும், வீரர்கள் இடையிலான நட்பும் வளரும். மேலும் இதுபோன்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்(2015-ல் நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட தினம்) தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.