கலிபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின


கலிபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின
x
தினத்தந்தி 15 May 2018 3:53 AM GMT (Updated: 15 May 2018 3:53 AM GMT)

கலிபோர்னியாவின் ஒக்லாந்து பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. #CaliforniaEarthquake

கலிபோர்னியா,

கலிபோர்னியாவிலுள்ள ஒக்லாந்து பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஒக்லாந்து மற்றும் சான் பிரான்சிஸ்கோ பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. மேலும் நிலநடுக்கம் தொடர்பான சேதங்கள் குறித்து எந்த வித தகவல்களும் வெளிபடவில்லை.

இந்நிலையில் ஒக்லாந்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து 1.8 மைல் தொலைவில் சுமார் 5.5 மைல் (9 கி.மீ.) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Next Story