உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 17 May 2018 10:15 PM GMT (Updated: 17 May 2018 7:25 PM GMT)

* அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்களில் ஒரு தரப்பினரை ஜனாதிபதி டிரம்ப், விலங்குகள் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* இங்கிலாந்து நாட்டில் மிடில்ஸ்பாரோ நகரில் மருந்துக்கடை நடத்தி வந்த ஜெசிகா பட்டேல் (வயது 34) என்ற இந்திய வம்சாவளி பெண், தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்த மிதேஷ் என்பவரை மணந்து கொண்டிருந்தார். ஜெசிகா பட்டேல் கொலை செய்யப்பட்டதின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

* மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கோலாலம்பூர் வீட்டில் 6 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அங்கிருந்து சில கைப்பைகளையும், உடைகளையும் போலீசார் எடுத்துச்சென்றதாக, நஜிப் ரசாக்கின் வக்கீல் ஹர்பால் சிங் கிரிவால் கூறினார்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அமெரிக்க தேர்தல் நேரத்தில் இதுபற்றி வாய்திறக்காமல் இருக்க, அவருக்கு டிரம்பின் வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.87 லட்சம்) கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்தன. இப்போது இந்த தொகை உள்ளிட்ட தேர்தல் செலவு வகைக்கு 2½ லட்சம் டாலரை வக்கீல் மைக்கேல் கோஹனுக்கு திருப்பித் தந்து உள்ளதாக டிரம்ப் ஒப்புக்கொண்டு உள்ளார்.

* இங்கிலாந்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழில் வல்லுனர்களுக்கு விசா மறுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்கள் ஆன்லைன் வழியாக அந்த நாட்டு அரசிடம் மனு அளித்து உள்ளனர். இந்தப் பிரச்சினையை கவனிப்பதாக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை மந்திரி சாஜித் தாவித் கூறி உள்ளார்.

Next Story