கிம் சந்திப்பு ரத்து: டிரம்ப் ‘திடீர்’ பல்டி

கிம் சந்திப்பு ரத்து: டிரம்ப் ‘திடீர்’ பல்டி
x
தினத்தந்தி 25 May 2018 10:00 PM GMT (Updated: 25 May 2018 7:27 PM GMT)

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து நடத்த இருந்த பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக ரத்து செய்தார்.

வாஷிங்டன், 

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து நடத்த இருந்த பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக ரத்து செய்தார்.

இதுபற்றி வடகொரியா நேற்று கருத்து தெரிவிக்கையில், “சிங்கப்பூர் பேச்சுவார்த்தையை டிரம்ப் ரத்து செய்தது எதிர்பாராத ஒன்று, இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது, எந்த நேரத்திலும், என்ன வடிவத்திலும் அமெரிக்காவுடன் பேசத் தயார்” என கூறப்பட்டது.

இந்த நிலையில் டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களை சந்தித்தார். அப்போது இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அடுத்த மாதம் 12-ந் தேதி அந்த சந்திப்பை நடத்த முடியும். நாங்கள் இப்போது அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் இது நடக்க வேண்டும் என்று மிகவும் விரும்புகிறார்கள். நாங்களும் அதையே விரும்புகிறோம்” என பதில் அளித்தார்.

கிம் சந்திப்பை ரத்து செய்த 24 மணி நேரத்திற்குள், இப்போது அந்த சந்திப்பை நடத்த முடியும் என கூறி டிரம்ப் பல்டி அடித்து இருப்பது சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story