உலக செய்திகள்

தென் ஆப்ரிக்கா: காந்திசிலையை திறந்து வைத்தார் சுஷ்மா சுவராஜ் + "||" + South Africa: Sushma Swaraj opened Gandhi's statue

தென் ஆப்ரிக்கா: காந்திசிலையை திறந்து வைத்தார் சுஷ்மா சுவராஜ்

தென் ஆப்ரிக்கா: காந்திசிலையை திறந்து வைத்தார் சுஷ்மா சுவராஜ்
தென் ஆப்ரிக்காவில் மார்பளவு காந்தி சிலையை சுஷ்மா சுவராஜ் திறந்து வைத்தார். #SushmaSwaraj #GandhiStatue
பீட்டர்மரிட்ஸ்பர்க்,

தென் ஆப்ரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு காந்தி சிலையை இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் 10-வது உச்சிமாநாடு வரும் ஜூலை 25-ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறத்துறை மந்திரிகளின் கூட்டம்  4-ந் தேதி  தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தென் ஆப்ரிக்காவுக்கு  சென்றிருக்கிறார்.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு காந்தி சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், திறந்து வைத்தார். பீட்டர்மரிட்ஸ்பர்க் நகரில் பணிபுரிந்து வந்த மகாத்மா காந்தியை, ஆங்கிலேயர்கள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவத்தின் 125 -வது ஆண்டு நினைவாக இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.  

முன்னதாக பென்ட்ரிச் நகரத்தில் இருந்து, பீட்டர்மரிட்ஸ்பர்க் வரை, சுஷ்மா ஸ்வராஜ் ரயிலில் பயணம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள் மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்படுகிறார்
இன்று ராப்பத்து உற்சவத்தின் 2-வது நாளையொட்டி நம்பெருமாள் மதியம் 12 மணிக்கு புறப்படுகிறார்.
2. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. தஞ்சையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
தஞ்சையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5. திருச்சி ரெயில் நிலையம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் ஆம்னி பஸ் நிலையம் ஆயுதபூஜைக்கு திறப்பு
திருச்சி ரெயில்நிலையம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் ஆம்னி பஸ் நிலையம் அமைகிறது. ஆயுதபூஜை அன்று திறக்கப்படுகிறது.