டொனால்ட் டிரம்ப் உடன் தனது சந்திப்பு நிகழும் போது தான் கொல்லப்படலாம் வடகொரிய அதிபர் அச்சம்


டொனால்ட் டிரம்ப் உடன் தனது சந்திப்பு நிகழும் போது தான் கொல்லப்படலாம் வடகொரிய அதிபர் அச்சம்
x
தினத்தந்தி 8 Jun 2018 12:07 PM GMT (Updated: 8 Jun 2018 12:07 PM GMT)

டொனால்ட் டிரம்ப் உடன் தனது சந்திப்பு நிகழும் போது தான் கொல்லப்படலாம் என வடகொரிய அதிபர் பயப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.


சிங்கப்பூரில் வருகின்ற ஜூன் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகிய இருவரும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடக்க இருக்கிறது.பல்வேறு தடைகளுக்குப் பின் நடக்க இருக்கும் இந்த சந்திப்பின் போது தான் கொல்லப்படலாம் என வடகொரிய அதிபர் பயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது கடந்த ஞாயிறன்று கிம் தனது தலைமை தளபதிகள் மூன்று பேரை அதிரடியாக மாற்றி தனக்கு நம்பிக்கையானவர்களை பணியில் அமர்த்தியிருப்பதன் மூலம் உறுதிப்படுத்த படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் நடக்கவிருப்பதால் சந்திப்பு நிகழுமுன் கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்கவிருக்கிறார்கள்.

 அமெரிக்கா அல்லது அவரது எதிரி நாடுகள் தன்னை உயிருடன் விட்டு வைக்காது என நம்பும் கிம் கூட்டணி நாடான சீனாவும் கூட தன்னைக் கொல்ல நினைப்பதாக சில நம்பிக்கையான இடங்களில் இருந்து அவருக்கு தகவல் வந்துள்ளதாக கூறியுள்ளார்.சீனா கடந்த வருடம் கிம் ஜாங் உன்னை படுகொலை செய்துவிட்டு அவரது சகோதரர் ஆன கிம் ஜாங் நம் மை வடகொரிய அதிபராக்க முயற்சித்தது. ஆனால் தவறுதலாக கிம் ஜாங் நம் அதில் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். மலேசியா விமான நிலையத்தில் இந்த படுகொலை நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின் கிம் பயப்பட ஆரம்பித்திருக்கிறார். மேலும் சிங்கப்பூர் என்பது மலேசியாவின் அண்டை நாடு என்பதால் தான் படுகொலை செய்யப்படுவோம் என்கிற பயம் அவருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டும் இன்றி தென்கொரியாவிலும் ஒரு சில நபர்கள் வடகொரியா அதிபரை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும் அவருக்கு வந்த செய்தி அவரது உயிர் பயத்தை அதிகரித்திருக்கிறது.

ஆகவே சந்திப்பு நிகழும் செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில் செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story