உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 10 Jun 2018 12:00 AM GMT (Updated: 9 Jun 2018 7:42 PM GMT)

ஈராக் நாட்டில் கிர்குக் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்

* அமெரிக்காவுடனான ரஷியாவின் உறவு மேம்படும், அதற்கு நாங்கள் தயாராகத்தான் உள்ளோம்; ஆனால் பந்து, அமெரிக்காவின் மைதானத்தில்தான் உள்ளது என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

* சீன அரசின் சார்பில் செயல்படுகிற ஹேக்கர்கள் (சட்ட விரோதமாக மற்றவர்களின் கணினி இணையதளத்தில் புகுபவர்கள்), அமெரிக்க கடற்படை ஒப்பந்தக்காரர் கணினியில் புகுந்து முக்கிய ரகசிய தகவல்களை திருடி விட்டதாக புகார் எழுந்து உள்ளது.

* ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம், பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதுவும் 3-ம் தரப்பினர் ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்கள் தகவலை திருடுவதை தடுத்து விட்டதாக அந்த நிறுவனம் கூறிய பிறகு இது நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

* ஈராக் நாட்டில் கிர்குக் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

* இங்கிலாந்து நாட்டில் வருடாந்திர ராணுவ அணிவகுப்பின்போது முதல்முதலாக சீக்கிய வீரர் சரண்பிரீத் சிங் தலைப்பாகை அணிந்து பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Next Story