உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி + "||" + Blast outside Kabul govt ministry, casualties feared: officials

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி
காபூலில் உள்ள அரசாங்க அலுவலத்தின் வெளியே நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். #KabulMinistryBlast
காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகத்தின் வெளியே சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. ரமலான் பண்டிகை வருவதையொட்டி பணியாளர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுகையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

”அரசாங்க அலுவலத்தின் வெளிப்புற வாயிலில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை” என மத்திய கிராமப்புற புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி திட்ட செய்தி தொடர்பாளர் தாவூத் நைமி தெரிவித்துள்ளார்.