உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 16 Jun 2018 10:00 PM GMT (Updated: 16 Jun 2018 7:11 PM GMT)

* தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ராட்சத பாறாங்கல் ஒன்றின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* ஏமன், உள்நாட்டுப்போரில் ஹூதைதா துறைமுக நகரின் விமான நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து சவுதி கூட்டுப்படையினர் உதவியுடன், அதிபர் ஆதரவு படையினர் மீட்டு விட்டனர்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “உலகம் போதுமான அளவுக்கு மோதல்களை பார்த்து விட்டது. அமைதியை ஏற்படுத்தவும், அணு ஆயுத அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வரவும், ஒரு வாய்ப்பு கிடைத்தால், என்ன விலை கொடுத்தேனும் அதை அடைய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

* பசிபிக் பெருங்கடல் தீவு நாடான டோங்காவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் உண்டா என தெரியவரவில்லை.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் பால் மானபோர்ட், அங்கு நடந்த தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் சாட்சியங்களை கலைக்க முயன்றார் என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த வழக்கில் அவரை சிறையில் அடைக்க வாஷிங்டன் மாவட்ட நீதிபதி எமி பெர்மன் ஜாக்சன் உத்தரவிட்டார்.

Next Story