உலக செய்திகள்

அதிபர் ஆட்சி முறைக்கு மாறியது துருக்கி மருமகனை நிதி மந்திரி ஆக்கினார், எர்டோகன் + "||" + Turkey became the ruler of the regime

அதிபர் ஆட்சி முறைக்கு மாறியது துருக்கி மருமகனை நிதி மந்திரி ஆக்கினார், எர்டோகன்

அதிபர் ஆட்சி முறைக்கு மாறியது துருக்கி மருமகனை நிதி மந்திரி ஆக்கினார், எர்டோகன்
துருக்கி நாட்டில் 2016–ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார்.

அங்காரா,

துருக்கியில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அந்த நாடு 95 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இருந்து அதிபர் ஆட்சி முறைக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக எர்டோகன் எதிர்ப்பாளர்கள், துருக்கியின் ஜனநாயகம் அழிவுப்பாதையில் சென்றுவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.

உடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை: சவுதியில்தான் வழக்கு விசாரணை என அறிவிப்பு
துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை சம்பந்தமான வழக்கு, சவுதியில்தான் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. துருக்கியில் பத்திரிகையாளர் மாயமான விவகாரம்: சவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு
துருக்கியில் பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சவுதி அரேபிய மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
3. துருக்கி: சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை
துருக்கியில் சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார்.
4. துருக்கி: விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் பலி
துருக்கியில் நடைபெற்ற விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டனர். #Turkey
5. உலகைச்சுற்றி...
துருக்கியின் அண்டால்யா மாகாணத்தில் அகதிகள் 15 பேருடன் கடலில் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது.