உலக செய்திகள்

சீன பொருட்கள் மீதான வரிவிதிப்பை 200 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க அமெரிக்கா திட்டம் + "||" + US fires next shot in China trade war

சீன பொருட்கள் மீதான வரிவிதிப்பை 200 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

சீன பொருட்கள் மீதான வரிவிதிப்பை 200 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
சீன பொருட்கள் மீதான வரிவிதிப்பை 200 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளிடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது.

வாஷிங்டன்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1,300 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி உயர்த்தி அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் பட்டியல் வெளியிட்டு உள்ளது. 50 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3¼ லட்சம் கோடி) இந்த வரி உயர்வு அமைந்து இருந்தது.

அமெரிக்கா 1,300 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு எடுத்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது

மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய கார், விமானம் உள்ளிட்ட 106 பொருட்கள், சாதனங்களுக்கு 25 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்த சீனாவின் ஜின்பிங் நிர்வாகம் முடிவு எடுத்தது. இதுவும் அமெரிக்கா போன்று 50 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3¼ லட்சம் கோடி) அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்  சீனா பொருட்கள் மீதான வரி விதிப்பை 200 பில்லியன் டாலர் வரை அதிகப்படுத்த   திட்டமிட்டு வருகிறார்.

சீன இறக்குமதி பொருட்களுக்கு பாதிக்கும் மேல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதால், இரு நாடுகளிடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. 

இதனால் சீன சந்தைகள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை கொள்ளையடிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை தருவதற்காகவே இந்த வரி விதிப்பு போட்டி நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஆசிரியரின் தேர்வுகள்...