உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்


உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்
x
தினத்தந்தி 16 July 2018 11:39 AM GMT (Updated: 16 July 2018 11:39 AM GMT)

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிக்கபட்டதாக ரஷ்ய அதிபர் புதின் கூறி உள்ளார். #VladimirPutin

மாஸ்கோ

உலககோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தின் பரிசளிப்பு விழாவில் ரஷ்ய அதிபர்  புதினுக்கு குடை பிடிக்கப்பட்டது தொடர்பாக ரசிகர்கள் கிண்டலுக்குள்ளான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்ற 21-வது உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கியது. இதனால் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், அந்நாட்டு ரசிகர்கள் வீரர்கள் என பலர் தங்கள் மகிழ்ச்சியை பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் மேடையில் ரஷ்ய அதிபர் புதின்  பிபா கால்பந்து தலைவர் ஜியனி இன்பண்டினோ  பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், குரோசியா அதிபர் கொலிண்டா கிராபர் உள்ளிட்ட பலர் இருந்தனர். பரிசளிப்பு விழாவிற்கு முன்னரே சிறிது அளவில் மழை பெய்தது. வீரர்களுக்கு பதக்கம் கொடுத்து கவுரவிக்கும் நேரத்தில் மழை கொட்டியதால், புடினுக்கு மட்டும் குடை பிடிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் அங்கிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் குரோசியா ஜனாதிபதி ஆகியோருக்கு குடை பிடிக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் கொட்டும் மழையில் தங்கள் வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இதைக் கண்ட இணையவாசிகள் புடினை கிண்டல் அடிக்கும் விதமாக அது தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து தங்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். அதில், ஒருவர் புதினுக்கு என்ன ஆச்சு என்று கிண்டலான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதே போன்று பலரும் கிண்டல் செய்யும் விதமாக கமெண்ட்களை பதிவு செய்து வந்ததால், புடினின் ஆதராவளர்கள் சிலர் மறைந்த இராணுவ வீரர் ஒருவருக்கு புதின்   கொட்டும் மழையில் மரியாதை செலுத்துவது தொடர்பான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து தொடுக்கப்பட்ட 2.50 கோடி சைபர் தாக்குதல்களை ரஷியா மற்றும் பிற நாடுகளின் பாதுகாப்பு நிறுவனங்கள் முறியடித்ததாக அதிபர் புதின்  அறிவித்தார்.

Next Story