‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் ஐரோப்பிய கூட்டமைப்பு நடவடிக்கை


‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் ஐரோப்பிய கூட்டமைப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 19 July 2018 12:00 AM GMT (Updated: 18 July 2018 8:07 PM GMT)

‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு 4.3 பில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

பிரசல்ஸ், 

முன்னணி இணையதள தேடுபொறியான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு 4.3 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி) அபராதம் விதித்தது. பிரசல்ஸ் நகரில், ஐரோப்பிய கூட்டமைப்பின் போட்டி ஆணையர் மார்கரெட் வெஸ்டகர் இதை அறிவித்தார்.

கூகுள் நிறுவனம், தனது தேடுபொறியான கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தும் வகையில், ஆன்ட்ராய்டு மொபைல் போன் சிஸ்டத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாம்சங், ஹுவெய் ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்களில் தனது கூகுள், கூகுள் குரோம்களை முன்கூட்டியே நிறுவச்செய்து, தனது போட்டியாளர்களை ஒடுக்கியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக நடை பெற்ற விசாரணையின் முடிவில், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ‘கூகுள்’ தலைவர் சுந்தர் பிச்சையிடம் மார்கரெட் வெஸ்டகர் முன்கூட்டியே தெரிவித்துள்ளார். அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ‘கூகுள்’ அறிவித்துள்ளது. 

Next Story