உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 26 July 2018 10:00 PM GMT (Updated: 26 July 2018 9:06 PM GMT)

* வட கொரியா இன்னும் அணுசக்தி பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறுகிறார்.

* லண்டனில் 5 மாடிகளை கொண்ட ‘வெஸ்ட் ஹேம்ப்ஸ்டெட்’ அடுக்கு மாடி குடியிருப்பில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அந்த குடியிருப்பில் வசிக்கிற மக்கள் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 15 தீயணைப்பு வண்டிகளுடன், சுமார் 100 வீரர்கள் வந்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு உளவுத்துறை வாகனத்தின்மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி தலீபான் பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் குண்டுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியானதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

* அதிகபட்ச பணவீக்கத்தால் தத்தளித்து வருகிற வெனிசூலாவில் பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்து உள்ளார்.

* செங்கடலில் 2 பெரிய எண்ணெய் கப்பல்கள் மீது ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து செங்கடல் வழியான தனது எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது.

Next Story