உலக செய்திகள்

7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற முயன்ற தந்தை + "||" + 7th floor To save the son who fought for life Father who tried

7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற முயன்ற தந்தை

7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற முயன்ற தந்தை
7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற எந்தவித உபகரணமும் இன்றி முயன்ற தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
சீனாவில் 7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற எந்தவித உபகரணமும் இன்றி களத்தில் இறங்கி செயல்பட்ட தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.சீனாவின் குவாய் டாங்  மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங் . இவர் நேற்று காலை தன்னுடைய மகளை பள்ளியில் விடுவதற்காக மகனை வீட்டிலே தனியாக விட்டு சென்றுள்ளார். அந்த நேரம் தூக்கத்திலிருந்து விழித்த அவருடைய மகன், வெளியில்  சத்தத்தை கேட்டு, திருடன் என நினைத்துக்கொண்டு, ஏசி வைக்கப்பட்டிருக்கும் பகுதி வழியாக வெளியில் இறங்க முயற்சி செய்துள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக 7-வது தளத்தின் பின் பக்கத்தில் சிக்கிக்கொண்டு சத்தமிட்டுள்ளான்.  இதற்கிடையில் வீடு திரும்பிய ஹூவாங், வீட்டில் சிறுவன் இல்லாததை கண்டு வெளியில் வந்து பார்த்துள்ளார். அங்கு அந்தரத்தில் மகன் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்ததுடன், கணவருக்கும் தகவல் கொடுத்துள்ளார். 

இதனடிப்படையில் 10 நிமிடத்தில் வீட்டிற்கு வந்த கணவர், எந்தவித உபகரணமும் இன்றி உடனடியாக களத்தில் இறங்கி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டார். ஒருவழியாக சிறுவனை அடைந்த பொழுது, தீ அணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். பின்னர் கயிறுகளின் உதவியுடன் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் துணிந்து கதாநாயகன் போல செயல்பட சிறுவனின் தந்தைக்கு தற்போது நாலாபுரத்திலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.