உலக செய்திகள்

சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்த சிங்கம் + "||" + lion fled over the tourists

சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்

சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்
உக்ரைன் நாட்டில் சிங்கம் ஒன்று திடீரென்று அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்ததால், பீதியடைந்துள்ளனர்.

உக்ரைனில் உள்ள பிரபல டெய்கான் சபாரி பார்க்கில், சபாரி வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த சிங்கத்தை காண வாகனத்தை நிறுத்தியுள்ளனர். திடீரென்று எதிர்பாராத வகையில் சுற்றுலா பயணிகள் மீது சிங்கம் பாய்ந்தது. வாகனத்திற்குள் ஏறி குதித்து பயணிகள் மீது தாவியுள்ளது.

இதனால் பயணிகள் பீதியடைந்தனர். ஆனால் சிங்கமோ அவர்களை தாக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி பயணிகள் தப்பித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.மேலும் இது போன்ற சபாரி ரைடுகள் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், சுற்றுலா பயணி ஒருவரின் கையை சிங்கம் கடித்து குதறிய சம்பவம் நடைப்பெற்றுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் ஆட்சியாளர்கள் அறிவிப்பு
2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார். இதனால் இந்திய தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
2. நோய்களை குணப்படுத்துமா கழுதைப் பால்? கூவி, கூவி விற்கும் பெண்மணி: ஒரு சங்கு ரூ.50
தஞ்சை மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பெரம்பலூர் பெண் ஒருவர் கூவி கூவி கழுதைப்பால் விற்பனைச் செய்து வருகிறார்.
3. ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடியது
ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடி கட்டியாக மாறியது.
4. ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
5. இரக்கமின்றி சிறுவனைத் தாக்கிய டியூசன் டீச்சர்
இரக்கமின்றி சிறுவனைத் தாக்கிய டியூசன் டீச்சரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.