ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலி


ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலி
x
தினத்தந்தி 15 Sep 2018 8:12 AM GMT (Updated: 15 Sep 2018 8:12 AM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து நொறுங்கிய விபத்தில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistan #HelicopterCrashes

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு ஃபாராக் மாகாணத்தில் பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் விமான ஓட்டுனர் மற்றும் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

நேற்று மாலை நடந்த இந்த கோர விபத்து குறித்து ஃபாராஹ் மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் நாசிர் மெஹ்ரி கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலால் இந்த விபத்து ஏற்படவில்லை எனக் கூறினார். 

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலிபான்களை எளிதில் தாக்குவதற்கு ஏதுவாக, பாதுகாப்பு படை வீரர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

Next Story