வியட்நாமில் நடைபெற்ற இசைத்திருவிழாவில் சோகம் 7 பேர் பலி


வியட்நாமில் நடைபெற்ற இசைத்திருவிழாவில் சோகம் 7 பேர் பலி
x
தினத்தந்தி 17 Sep 2018 12:31 PM GMT (Updated: 17 Sep 2018 12:31 PM GMT)

வியட்நாமில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் மர்மமான போதைப்பொருளை எடுத்துக்கொண்டதால், 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வியட்நாம் டாய் ஹோ மாவட்டத்தில் ஹனோய் நீர் பூங்கா பகுதியில் நேற்று இரவு  மாபெரும் இசைத்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அப்போது பொதுமக்களில் சிலர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் உடனடியாக  போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயக்கமடைந்து கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானதோடு, 5 பேர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகமான பொதுமக்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிடப்படாத போதைப்பொருளை பொதுமக்கள் பலரும் உட்கொண்டதால் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ஹனோயின் நகர அரசாங்கத்தின் பிரச்சார துறையின் துணைத் தலைவரான டிரான் சூவான் ஹே கூறுகையில், நேற்று நடந்த சம்பவம் மிகவும் வேதனையாக இருந்தது. இது ஒரு பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார்.

Next Story