உலக செய்திகள்

எப்படி இருந்த அவர் இப்படி ஆயிட்டார் ! உடல் எடையை குறைத்த மாடல் அழகி அவலட்சணமாக மாறிய கொடூரம் + "||" + Losing weight model The horrible horror

எப்படி இருந்த அவர் இப்படி ஆயிட்டார் ! உடல் எடையை குறைத்த மாடல் அழகி அவலட்சணமாக மாறிய கொடூரம்

எப்படி இருந்த அவர் இப்படி ஆயிட்டார் ! உடல்  எடையை குறைத்த மாடல் அழகி அவலட்சணமாக மாறிய கொடூரம்
ரஷ்யா மாடல் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் மட்டும் சாப்பிட்டு வந்ததால், தற்போது அவர் வெறும் 17 கிலோ எடை மட்டுமே இருக்கிறார்.
ரஷ்யாவின் பர்னவுல்  பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கரியாகினா.  தற்போது 26 வயதாகும் இவர் தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே சரியாக சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார்.அதற்கு பதிலாக வாழைப்பழம், ஆப்பிள், தண்ணீர் மற்றும் ஜுஸ் போன்றவைகளையே குடித்து வந்துள்ளார். இதனால் உடல்கள் மெலிந்து மிகவும் பரிதாபமாக காணப்பட்டுள்ளார்.

இது பசியற்ற நோய் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் அதிக எடை கொண்டுவிட்டோமோ என்ற பயத்தினால் சரியாக சாப்பிடாமல் இருப்பது, சாப்பிடாமல் இருந்தால், நம்முடைய பழைய நிலைமைக்கு வந்துவிடலாம் என்ற எண்ணம் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் கிறிஸ்டினாவின் நிலையை அறிந்த பிரபல டிவி ஸ்டார் மரியா கோக்னோ அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.இதனால் சமூகவலைத்தளங்களில் தன்னை பின்பற்றும் சுமார் 520,000-க்கும் மேற்பட்டோருக்கும்  கிறிஸ்டினாவின் கதையை பகிர்ந்துள்ளார்.ஏனெனில் மரியா வும் இது போன்ற மோசமான நோயை சந்தித்து அதிலிருந்து போராடி வெளியில் வந்தவர் தான், இதன் காரணமாக அதன் வலி என்ன என்பது எனக்கு தெரியும்.

நாம் கண்முன்னே சாப்பாடு இருக்கும் ஆனால் சாப்பிடமுடியாது, இறக்கும் தருவாயில் கூட கண்முன்னே சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாது என்று அவர் கூறியுள்ளார். இவர் எடுத்த முயற்சியின் பயனாக யான் கோலன்ட்  என்ற மருத்துவர் இலவசமாக கிறிஸ்டினாவுக்கு சிகிச்சையளிக்க முன்வந்துள்ளார்.

அவர் கூறுகையில், கிறிஸ்டினா பார்ப்பதற்கு உயிருள்ள பிணம் போன்று இருக்கிறார். அவர் பேய் படங்களில் நடிக்கலாம், அவரின் தோற்றம் அப்படித் தான் இருக்கிறது என்று கிண்டலாக கூறியுள்ளார். இதற்கும் மீறி அவர் சரியான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், ஒரு ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருப்பதே கடினம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் கிறிஸ்டினா சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இது குறித்து அவரின் அம்மாவிடம் கேட்ட போது, சில தினங்களுக்கு முன் அவள் கஞ்சி சாப்பிட்டதை நான் பார்த்தேன், அதை என் கண்ணாலே நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிறிஸ்டினாவின் நிலையை கண்ட இணையவாசிகள் அவர் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். கிறிஸ்டினா தற்போது 17 கிலோ எடைமட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கதவு அசையாமல் இருக்க வைத்த கல்லுக்கு வந்த மவுசு
அமெரிக்காவில் வீட்டின் கதவு அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முட்டுக் கட்டையாக வைக்கப்பட்டிருந்த கல்லின் இன்றைய மதிப்பு கோடி ரூபாய் ஆகும்.
2. சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்
உக்ரைன் நாட்டில் சிங்கம் ஒன்று திடீரென்று அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது பாய்ந்ததால், பீதியடைந்துள்ளனர்.