விர்ஜினியாவில் இரட்டைத்தலையுடன் கூடிய பாம்பு பிடிப்பட்டது


விர்ஜினியாவில் இரட்டைத்தலையுடன் கூடிய பாம்பு பிடிப்பட்டது
x
தினத்தந்தி 23 Sep 2018 2:43 PM GMT (Updated: 23 Sep 2018 2:43 PM GMT)

விர்ஜினியா நாட்டில் செம்பு நிறத்தில் இரட்டைத்தலையுடன் கூடிய பாம்பு பிடிப்பட்டது.

விர்ஜினியா,

கடந்த வெள்ளிக்கிழமை விர்ஜினியாவில்  உட்பிரிட்ஜில் (WoodBridge) இருக்கும் குடியிருப்பு பகுதி ஒன்றில் இரட்டைத்தலையுடன் கூடிய பாம்பு கிடந்துள்ளது.  இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், இரட்டைத்தலை பாம்பை உயிருடன் பிடித்தனர்.  பின்னர், அதனை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். பிடிப்பட்ட பாம்புக்கு தனித்தனி மூளையும் ஆனால் இதயம் ஒன்று தான் என கூறப்படுகிறது. 

இரட்டைதலையுடன் கூடிய பாம்பு குறித்து தகவல் கிடைத்தவுடன், அதனை நேரில் பார்க்க படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.  அந்த பாம்பின் தலை தாமிர நிறத்தில் நிறத்தில் உள்ளது.  சாதரணமாக பாம்பு கொத்தினாலே நமது உடலில் உடனே விஷம் ஏறி, இரத்தம் உறைந்து விடும். இது இரட்டைத்தலை என்பதால், விஷத்தின் தன்மை  அதிகமாக இருக்கும் என்று வன உயிரி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

Next Story