உலகைச் சுற்றி


உலகைச் சுற்றி
x
தினத்தந்தி 27 Sep 2018 9:30 PM GMT (Updated: 27 Sep 2018 5:38 PM GMT)

* அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ள பிரெட் கவனாக் மீது கிறிஸ்டின் போர்டு, டெபோரா ரமிரெஸ் ஆகிய 2 பெண்கள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், இப்போது மேலும் 2 பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. அவற்றை பிரெட் கவனாக் மறுத்துள்ளார்.

* பாகிஸ்தானை சேர்ந்த முகமது சொகைல் காஸ்மனி என்பவர் அமெரிக்காவில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்ட வழக்கில் சிக்கி தண்டிக்கப்பட்டார். தண்டனை முடிந்த நிலையில், அவர் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

* ஈராக் நாட்டில் அன்பார் மாகாணம், ரமடி நகர் அருகே பயங்கரவாத குழு ஒன்றின் தலைவர் ரமடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்பது அறிவிக்கப்படவில்லை.

* பாகிஸ்தானில் சொத்துக்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஜகாங்கிர் கான் தாரின், தேர்தலில் போட்டியிட அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு வாழ்நாள் தடை விதித்தது. இந்த தடையை மறு ஆய்வு செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. 

Next Story