முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் மீடூ இயக்கம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது


முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் மீடூ இயக்கம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது
x
தினத்தந்தி 10 Oct 2018 12:39 PM GMT (Updated: 10 Oct 2018 12:39 PM GMT)

முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் மீடூ இயக்கம் இந்தியாவிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. #MeToo

பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எண்ணற்ற பல நூற்றாண்டுகளாக  பெண்களுக்கு வலி மற்றும் துன்பங்களின் ஆதாரங்கள் இருந்தன.  ஆனால் #METoo இயக்கம் ஓர் ஆண்டு முன்பு தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு விடிவு பிறந்து உள்ளது.  இதில் பத்திரிகை ஒரு பங்கை கொண்டுள்ளது.

உலகம் முழுக்க ஒரு ஹேஸ்டேக் பல புயல்களை, பல குற்றச்சாட்டுகளை, பல தீர்வுகளை, பல சர்ச்சைகளை சுமந்து வலம் வருகிறது என்றால் அது ''மீடூ #MeToo'' ஹேஷ்டேக் என்று எளிதாக சொல்லிவிடலாம். இந்த ஹேஸ்டேக்கில் சென்று 10 நிமிடம் படித்தாலே பல அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்கு கிடைக்கும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ஹேஷ்டேக் தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. தமிழகத்தில் இந்த இயக்கம் ஏற்படுத்த போகும் புயலுக்கான பிள்ளையார் சுழி இப்போதே போடப்பட்டுவிட்டது,

''#MeToo'' என்பது ஹேஸ்டேக்காக உருவாவதற்கு முன்பே 
ஓர்
 இயக்கமாக உருவாகிவிட்டது. ஆஃப்ரோ - அமெரிக்க இனத்தை சேர்ந்த தரானா புர்க் என்ற சமூக செயற்பாட்டாளர் இந்த இயக்கத்தை 2006ல் தொடங்கினார். ஆம் 2006ல். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.

இந்த ''மீடூ #MeToo'' வைரல் ஆனது 2017 அக்டோபர் 10 ந்தேதி தான். அப்போது, ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டேய்ன் மீது 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் வைத்தனர். 

இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா நடிகர்  நானா படேகர்  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதையடுத்து தற்போது இந்தியாவில் மீடூ வைரலாகி 
உள்ளது.
  இதை தொடர்ந்து பாலிவுட் அப்பா நடிகர் ஆலோக் நாத் மீது பல நடிகைகள் புகார் கூறினர்.

பத்திரிகையாளர்களும் இதில் விலக்கல்ல.  பத்திரிகையாளராக இருந்து மத்திய மந்திரியாக உள்ள  எம்.ஜே.  அக்பர்  மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பாடகி சின்மயி தீவிரமாக இந்த டேக்கின் கீழ் புகார்களை எழுதி வருகிறார். பாடலாசிரியர் வைரமுத்து மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். வைரமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.  இந்த மீடூ ஹேஷ்டேக் மூலம் பெண்கள் வெளிப்படையாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்கிறார்கள்.  மீடூ விவகாரத்தில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Next Story