மீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் பக்கா ஆதாரங்களை காட்ட வேண்டும் - மெலனியா டிரம்ப்


மீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் பக்கா ஆதாரங்களை காட்ட வேண்டும் - மெலனியா டிரம்ப்
x
தினத்தந்தி 11 Oct 2018 6:24 AM GMT (Updated: 11 Oct 2018 6:24 AM GMT)

மீடூ இயக்கத்தின் மூலம் குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் பக்கா ஆதாரங்களை காட்டவேண்டும் என டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறி உள்ளார்.

உலகம் முழுக்க மீடூ இயக்கம்  மூலம் பல பெண்கள்  தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல்  துன்பறுத்தல்களை குற்றச்சாட்டுகளாக கூறி வருகின்றனர்.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு எதிரான மீடூ இயக்கம் ஹாலிவுட்டில் ஆரம்பமானது. இது குறித்த கதைகள்  நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூ யார்க்கர் ஆகியவை வெளியிட்டன. ஹார்வி வெய்ன்ஸ்டைன் குறித்து ஹாலிவுட் நடிகைகள் கூறிய கதைகள் வெளிவந்தன

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த மீடூ  இந்தியாவில் பாலிவுட்டை மையம் கொண்டது.  தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. 

இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா நடிகர்  நானா படேகர்  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதையடுத்து தற்போது இந்தியாவில் மீடூ வைரலாகி உள்ளது.  இதை தொடர்ந்து பாலிவுட் அப்பா நடிகர் ஆலோக் நாத் மீது பல நடிகைகள் புகார் கூறினர்.

பத்திரிகையாளர்களும் இதில் விலக்கல்ல.  பத்திரிகையாளராக இருந்து மத்திய மந்திரியாக உள்ள  எம்.ஜே.  அக்பர்  மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது  குற்றம் சாட்டினார். அதற்கு அவரும்  விளக்கம் அளித்து உள்ளார். 

இந்த நிலையில்  மீடூ இயக்கம் மூலம்  பாலியல் குற்றசாட்டை கூறும் பெண்கள் பக்கா ஆதாரங்களை காட்டவேண்டும் என டொனால்டு டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப்  கூறி உள்ளார்.

இந்த மாதத்தில் ஆப்பிரிக்காவுக்கு வந்தபோது ஒரு நேர்காணலில் அமெரிக்காவின் முதல் பெண்மணி  #மீடூ இயக்கம் பற்றி உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது;-

"நீங்கள் ஏதாவது குற்றம் சாட்டினால்  ஆதாரங்களைக் காட்டுங்கள். நாம் ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.  நான் பாலியல் தாக்குதலுக்கு 
என  நீங்கள் யாரையாவது குற்றம் சொல்ல முடியாது. இதில்  சில நேரங்களில் ஊடகங்கள் மிக தொலைவில் உள்ளன. அவர்கள் சில கதைகளை சித்தரிக்கிறார்கள். அது சரியானதல்ல. நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும், இதில் பெண்களை மட்டுமல்ல, ஆண்களும் நீங்கள் அறிவீர்கள் என கூறி உள்ளார்.

Next Story