உலக செய்திகள்

பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு + "||" + Erdogan says Jamal Khashoggi murder was planned days in advance reports

பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு
பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்தான்புல்,

எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். இதை முதலில் சவுதி அரேபியா மறுத்து வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியா அரசு ஒப்புக் கொண்டது. எனினும் அதை சண்டையில் ஏற்பட்ட மரணம் என்று மட்டுமே தெரிவித்தது. பின்னர்தான் சவுதியிலிருந்து அனுப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது. இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையே கொலை நடந்த நாடான துருக்கியின் அதிபரும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என சவுதி இளவரசர் கூறியதாக அமெரிக்கா ஊடகங்கள் தகவல்
ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என்று சவுதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2. பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை மிகவும் அருவருக்கத்தக்கது - சவுதி அமைச்சர்
சவுதி அரேபியா மிகவும் நெருக்கடியில் உள்ளது. ஜமால் கசோகி கொலை மிகவும் அவருக்கத்தக்கது என சவுதி அரேபியா ஆயில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
3. கசோகி படுகொலை; தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: சவூதி அரேபியா
பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என சவூதி அரேபிய வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
4. கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது-சவுதி அரேபியா
கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது என சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
5. சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் கோடி கணக்கிலான நகைகள் கொள்ளை
பிரான்சில் சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் அவரின் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.