உலக செய்திகள்

நடு வானில் விமானங்கள் மோதல்: விமானி பலி + "||" + Plane Crashes In Ottawa After Mid-Air Collision, Pilot Dead

நடு வானில் விமானங்கள் மோதல்: விமானி பலி

நடு வானில் விமானங்கள் மோதல்: விமானி பலி
கனடாவில் நடு வானில் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் விமானி ஒருவர் பலியானார்.
ஒட்டவா, 

கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் நேற்று ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போதே வான் பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், திடீரென அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் இரண்டு விமானங்களும் நிலை குலைந்து தரையை நேக்கி பாய்ந்தன.

இதில், சிறிய ரக விமானம் சாலையோரம் உள்ள  புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உயிரிழந்தார். அந்த விமானத்தில் அவர் மட்டுமே பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்றொரு விமானத்தின் பைலட், விமானத்தை சாமர்த்தியமாக திருப்பி ஒட்டாவா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது ஹெலிகாப்டர் மோதல்; விமானி பலி
அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது.
2. முடி வளர சிகிச்சை எடுத்து 3 வருடம் சஸ்பெண்டான விமானி நீதிமன்றத்தில் மேல்முறையீடு
முடி வளர சிகிச்சை எடுத்து 3 வருடம் சஸ்பெண்டு ஆனதற்கு எதிராக விமானி ஒருவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
3. கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலி
கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலியாகினர்.
4. கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
கனடாவில் தேவாலயம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
5. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை
கனடாவில் பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.