இயற்கை சூரியனை விட வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா


இயற்கை சூரியனை விட வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா
x
தினத்தந்தி 16 Nov 2018 10:28 AM GMT (Updated: 16 Nov 2018 10:28 AM GMT)

சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கை சூரியன் 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நம்முடைய வானத்திலுள்ள சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் மட்டுமே கொண்டதாகும். இந்த உண்மையே ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்க, இந்த வெப்பநிலை, அணு ஆற்றல் ஆய்வாளர்களுக்கு இன்னொரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது பூமியில் அணுக்கரு இணைப்பை ஏற்படுத்த குறைந்தபட்சம் 100 மில்லியன் டிகிரி வெப்பம் தேவை என்பதுதான் அது. இன்றைய தேதியில் மிகச் சிறந்த அணுக்கரு இணைப்பு பரிசோதனைக்கு வழங்கப்பட்டுள்ள பெயர் செயற்கை சூரியன் என்பதாகும்.

ஆற்றலை உருவாக்க நமது சூரியன் பயன்படுத்தும் அதே செயல்பாட்டை உருவாக்க ஆய்வாளர்கள் இந்த அணுக்கரு உலையை உருவாக்கினார்கள். இந்த அணுக்கரு உலை, அணுக்கருப்பிளப்பின்போது வெளியாகும் வெப்பத்தை தாங்கும் விதத்திலான சுவர்களைக் கொண்டுள்ளது. அணுக்கரு இணைப்பில் ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. அது எவ்வளவு நேரம் அணுக்கரு இணைப்பை நீடிக்கச் செய்ய முடியும் என்பதுதான்.

இதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது, 2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு செயற்கை சூரியன், நம் வீடுகளில் இரவையும் பகலாக்கும் வண்ணம் பிரகாசிக்கலாம்.

Next Story