ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் 69 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு


ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் 69 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2018 11:00 PM GMT (Updated: 17 Nov 2018 7:37 PM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சமரச முயற்சி நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை.

காபூல்,

தலீபான் பயங்கரவாதிகளை வீழ்த்துவதில் ஆப்கானிஸ்தான் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 69 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதை ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இது குறித்து அந்த அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பக்தியா மாகாணத்தில் 22 பேர், கோர் மாகாணத்தில் 16 பேர், ஹெல்மாண்ட் மாகாணத்தில் 6 பேர், நங்கர்ஹார் மாகாணத்தில் 6 பேர், மைதான்வார்டாக் மாகாணத்தில் 4 பேர், உரூஸ்கான் மாகாணத்தில் 3 பேர், பார்யாப் மாகாணத்தில் 2 பேர், கஜினி மாகாணத்தில் 2 பேர் உள்பட மொத்தம் 69 தலீபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். பராக், பக்தியா, கஜினி, பார்யாப் மாகாணங்களில் மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்’’ என கூறப்பட்டுள்ளது.

தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களின்போது ஏராளமான ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் ஆப்கானிஸ்தான் படைகள் கைப்பற்றி உள்ளன.


Next Story