உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 4:52 PM GMT)

* ஈராக் நாட்டில் தியாலா, சலாகுதீன் மாகாணங்களில் நடந்த வான் தாக்குதல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

* ஜெர்மனியில் வடக்கு ரினே–வெஸ்டோபாலியா மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் 2 குட்டி விமானங்கள் மோதிக்கொண்டன.  இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி படுகாயம் அடைந்தார்.

* நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா முதல் கட்டமாக 100  கோடி டாலர் நிதி (ஒரு டாலர் மதிப்பு சுமார் ரூ.72) வழங்குகிறது. இதை பாகிஸ்தான் நிதி மந்திரி ஆசாத் உமர் தெரிவித்தார்.

* ஆப்கானிஸ்தானில் லோகார் மாகாணத்தில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒரு கார் சிக்கியது. அந்த காரில் பயணம் செய்த உள்ளூர் அதிகாரிகள் 2 பேர் பலியாகினர்.

* பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 4 புதிய ஊழல் புகார்களை விசாரணைக்காக ஊழல் தடுப்பு அமைப்பிடம் வழங்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது.


Next Story