உகாண்டா: படகு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி


உகாண்டா: படகு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி
x
தினத்தந்தி 25 Nov 2018 5:37 PM GMT (Updated: 25 Nov 2018 5:37 PM GMT)

உகாண்டா நாட்டில் உல்லாசப் படகு ஒன்று ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலியாயினர்.

கம்பாலா,

கிழக்காப்பிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா, கென்யா மற்றும் தான்சானியா நாடுகளை இணைக்கும் வகையில் உள்ள விக்டோரியா ஏரி சுமார் 70 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ளது.

உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள இந்த விக்டோரியா ஏரியில் சுமார் 100 பேருடன் ஒரு உல்லாசப் படகு சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதால், அந்தப் படகு நிலைதடுமாறி ஏரியில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் செய்வதறியாது தத்தளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் சிலரை உயிருடன் மீட்டனர். ஆனால் பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 30 உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


Next Story