உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 28 Nov 2018 11:00 PM GMT (Updated: 28 Nov 2018 4:59 PM GMT)

* உள்நாட்டுப் போர் நடந்து வருகிற லிபியாவில் பாதுகாப்பு நிலைமை மேம்பாட்டால் தங்கள் தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.

* இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்தின் விமானம், கடந்த மாதம் 29–ந் தேதி, அந்த நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, பங்கல் பினாங் நகருக்கு புறப்பட்டு சென்றபோது கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 189 பேரும் கூண்டோடு பலியாகினர். அந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆராயப்பட்டது. அதில், அந்த விமானத்தின் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு விமானத்தின் மூக்கு பகுதியை மீண்டும் மீண்டும் கீழே தள்ளியதும், விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விமானிகள் போராடி தோற்றதும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

* மெக்சிகோ நாட்டின் அதிபராக ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபெஸ் ஓப்ரடார் டிசம்பர் மாதம் பதவி ஏற்கிறார். இந்த விழாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

* ஜப்பானில் ஆவோமோரி மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. உள்ளூர்நேரப்படி காலை 11.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை, இன்ன பிற கட்டிடங்களை விட்டு வெளியேறி திறந்த மைதானங்களில், வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

* அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபைக்கு மிசிசிப்பி மாகாணத்தில் இருந்து நடந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் சிண்டி ஹைட் ஸ்மித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் மைக் எஸ்பியை வீழ்த்தினார்.


Next Story