உலக செய்திகள்

பிரேசிலில் வங்கிக் கொள்ளை முயற்சி முறியடிப்பு, பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேர் பலி + "||" + Twelve killed in foiled Brazil bank assaults

பிரேசிலில் வங்கிக் கொள்ளை முயற்சி முறியடிப்பு, பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேர் பலி

பிரேசிலில் வங்கிக் கொள்ளை முயற்சி முறியடிப்பு, பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேர் பலி
பிரேசிலில் வங்கிக் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் போலீசரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ரி டி ஜனோரியா,

பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில்  உள்ள நகரம் மிலேக்ரஸ். இந்த நகரத்தில் உள்ள இரு வங்கிகளில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் அதிகாலை 2 மணியளவில் கொள்ளையர்கள்  புகுந்தனர்.  இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியாக, பொதுமக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.


பின்னர் போலீசாரின் தாக்குதல் தீவிரமடைந்ததால் பிணைக் கைதிகளை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடினர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சண்டையில் 6 பிணைக் கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  பிணைக்கைதிகளாக கொல்லப்பட்டவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தினர் ஆவர்.  சுட்டுக்கொல்லப்பட்ட மேலும் ஒருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கை கைவிட்டது பிரேசில் போலீஸ்
பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கைவிடப்பட்டுள்ளது.
2. இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். வர்த்தகம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
3. பேஷன் ஷோவில் பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம்
பிரேசிலில் நடந்த பேஷன் ஷோவில் பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.