உலக செய்திகள்

பாலின சமநிலையின்மை : சீனாவிற்கு கடத்தப்படும் சிறுமிகள் - பெண்கள் + "||" + Thousands of women from Myanmar, Laos, Vietnam trafficked and sold as brides in China

பாலின சமநிலையின்மை : சீனாவிற்கு கடத்தப்படும் சிறுமிகள் - பெண்கள்

பாலின  சமநிலையின்மை : சீனாவிற்கு கடத்தப்படும்  சிறுமிகள் - பெண்கள்
பாலின சமநிலையின்மை காரணமாக சீனாவின் பக்கத்து நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் சிறுமிகள், பெண்கள் கடத்தப்பட்டு மணமுடிக்கப்படுகின்றனர்.
வியட்நாமில் இருந்து  ஆண்டுதோறும்  ஆயிரக்கணக்கான சிறுமிகள், பெண்கள் சீனாவுக்கு கடத்தப்பட்டு மணமகள்களாக விற்கப்படுகின்றனர் என  ஒரு ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

சீனாவில் ஒரு குழந்தை கொள்கை காரணமாக  சீனாவில் 3.3 கோடிக்கும் அதிகமாக ஆண்களைவிட பெண்கள்  குறைவாக உள்ளனர். இதனால் அருகில் உள்ள நாடுகளில் இருந்து  பெண்கள் கடத்தப்பட்டு சீன ஆண்களால் திருமணம் செய்து கொள்ளப்படுகிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து கடத்தப்பட்டு  சீனாவில்  மணமகள்களாக  விற்கப்படுகிறார்கள். குறிப்பாக சிறுமிகள் தான் அதிக அளவு கடத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு கடத்தி வரப்படும் பெண்களை,  சீனா ஆண்கள் விரும்பியவர்கள் போக,  விரும்பாதவர்களை  மற்றவர்களால் ஏமாற்றப்பட்டு கிழக்கு ஆசிய நாட்டிற்கு கடத்தப்படுகிறார்கள். 

ஆசிரியரின் தேர்வுகள்...