உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 11 Dec 2018 11:00 PM GMT (Updated: 11 Dec 2018 4:38 PM GMT)

* மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது, ‘1 எம்.டி.பி.’ என்னும் மலேசிய வளர்ச்சி நிதி தணிக்கை அறிக்கையை திருத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ராணுவ வாகனம் மீது தலீபான் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படையினர், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

* அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக வெளிநாட்டினரை கடத்திச்சென்றதாக பாவின் படேல் என்ற இந்தியர் சிக்கி உள்ளார். அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

* அண்டார்டிகாவுக்கு வடக்கே தெற்கு சாண்ட்விச் தீவுக்கு அருகே நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவானது. ஆனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை.

* வெனிசூலா நாட்டுக்கு ரஷியாவின் இரண்டு ‘டூ–160’ ரக போர் விமானங்கள் சென்று அடைந்துள்ளன. அவற்றை அந்த நாட்டின் ராணுவ மந்திரி விளாடிமிர் பட்ரினோ லோபெஸ் வரவேற்றுள்ளார். 

* மெக்சிகோ எல்லையில் இருந்து     நூற்றுக்கணக்கான படை வீரர்களை திரும்பப்பெறப்போவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது.

Next Story