உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 19 Dec 2018 10:15 PM GMT (Updated: 19 Dec 2018 9:17 PM GMT)

ஈராக்கில் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அப்பாவி மக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

* துருக்கிக்கு 3.5 பில்லியன் டாலர் (ஒரு டாலர் சுமார் ரூ.70) மதிப்பிலான பேட்ரியாட் ஏவுகணைகளை அமெரிக்கா விற்பனை செய்கிறது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க வெளியுறவுத்துறை வழங்கியது.

* மெசிடோனியா பிரதமர் ஜோரன், கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஆகியோரது பெயர்கள் 2019-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

* அமெரிக்காவில் கார் டிரைவராக பணியாற்றுகிற சீக்கியர் ஸ்வர்ன் சிங் பயங்கர ஆயுதத்தால் தாக்கப்பட்டார். அவரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் ரோரி பென்சனுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

* ஆண், பெண் பாலின பாகுபாடு பார்க்கிற மிக மோசமான நாடுகளின் பட்டியலில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

* ஈராக்கில் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அப்பாவி மக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஈரானில் கெர்மான் மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கோல்பாப் மற்றும் அதன் புற நகரப்பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* அமெரிக்காவில் விளம்பர சட்டங்களை மீறியதாக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 2 லட்சத்து 17 ஆயிரம் டாலரும், ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு 2 லட்சத்து 38 ஆயிரம் டாலரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story