உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 27 Dec 2018 11:00 PM GMT (Updated: 27 Dec 2018 4:48 PM GMT)

* பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மேற்கு கரை நகரில் 2 ஆயிரத்து 200 வீடுகள் கட்டுவதற்கு இஸ்ரேல் அதிகாரிகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

* அமெரிக்காவில் செயல்பட்டு வருகிற பன்னாட்டு கூரியர் நிறுவனம், ‘பெட் எக்ஸ் எக்ஸ்பிரஸ்’சின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர்.

* பாகிஸ்தானில், வரும் மார்ச் மாதம் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த நாட்டின் உள்துறை ராஜாங்க மந்திரி ஷெர்யார் கான் அப்ரிடி அறிவித்துள்ளார்.

* இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு உரிய காலத்துக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கு வசதியாக அந்த நாட்டில் ஆட்சியை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 38 மாடிகளை கொண்ட ஓபல் டவர் குடியிருப்பின் சுவரில் கீறல்கள் விழுந்துள்ளதால் அங்கு வசித்து வருகிறவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பது இது 2–வது முறை.

* ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வசதியாக தலீபான் பயங்கரவாதிகளுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வருகிற அமெரிக்கா, அவர்களது பாதுகாப்பு, வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ரோனில் சிங், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  


Next Story