உலக செய்திகள்

ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் பதவியைத் துறந்த 2 நாட்களில் மீண்டும் திருப்பம் + "||" + King of Malaysia gives up throne for new life with beauty queen

ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் பதவியைத் துறந்த 2 நாட்களில் மீண்டும் திருப்பம்

ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் பதவியைத் துறந்த 2 நாட்களில் மீண்டும் திருப்பம்
ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் தனது பதவியைத் துறந்த செய்தி வெளியான இரண்டே நாட்களில், அவர் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ்கோ

மலேசிய மன்னர் 5-வது சுல்தான் முகமது  ரஷ்ய மாடல் அழகி  ஒக்சானா வோவோடீனா (25), என்பரை திருமணம் செய்து கொண்டார். ஒக்சானா கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

தற்போது ரஷ்ய அழகி கர்ப்பமுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் திருமணமான உடனேயே சுல்தான் முகமது  (49), தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்பட்டு உள்ளது

தங்கள் இருவருக்கும் இடையில் 24 வயது வித்தியாசம் இருப்பதால், தங்கள் இனப்பெருக்க நலன் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகவே ஜெர்மனிக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இரண்டே ஆண்டுகள் மன்னராக பதவி வகித்த நிலையில், தனது மன்னர் பதவியை துறப்பதாக அறிவித்தார் சுல்தான். அவர் எதற்காக மன்னர் பதவியை துறக்க முடிவு செய்தார் என்பதற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை.

ரஷ்ய அழகியும் மாடலுமான ஒக்சானாவை மணந்தது மன்னரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதா என கேள்விகள் எழுந்தன. ஒக்சானாவை மணம் செய்ததால் மன்னர் பலரது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளான நிலையில், இந்த கவர்ச்சிப் படங்களும் செய்திகளும் வெளியானதும், அதனால்தான் மன்னர் தனது பதவியைத் ராஜினாமா செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதியினர், தங்கள் முழு நேரத்தையும் தங்கள் குழந்தைக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்ய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. "ஹூவாய் தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது"
ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை வலியுறுத்தியுள்ளனர்.
2. அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா? தெளிவுபடுத்தும் ஆய்வு முடிவுகள்
மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட துல்லியமான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
3. அடுத்த பிரதமர் என எதிர்பார்க்கப்படுபவர் வீட்டில் இரவில் கலாட்டா : இளம் காதலியுடன் சண்டை
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சன் வீட்டில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
4. 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு
கனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
5. புரோட்டோகாலை மீறும் வகையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...