இறக்கும் நிலையில் படிகமாக மாறிவரும் சூரியன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்


இறக்கும் நிலையில் படிகமாக மாறிவரும்  சூரியன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:37 AM GMT (Updated: 11 Jan 2019 11:22 AM GMT)

இறக்கும் நிலையில் நமது பூமிக்கு உரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அண்டத்தில் உள்ள சூரியன்களுக்கும் ஆயுட்காலம் உண்டு என ஏற்கனவே விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில் பூமிக்கு சொந்தமான சூரியனும் படிப்படியாக இறப்படைந்து வருவதாகவும், இதனால் திட பளிங்கு நிலைக்கு மாறிவருவதாகவும் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது தனது கையா  செயற்கைக்கோளின் உதவியுடன் இதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவை  சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மிகப் பெரிய வெள்ளை குள்ள நட்சத்திரங்கள் தங்கள் முடிவுகாலம் வரும் போது திடமான உலோக படிகங்களாக மாறும் வானியல் ஆய்வாளர்களுக்கு இவை ஆதாரங்களாக கிடைத்து உள்ளன.

இது வெள்ளைக் குள்ள கிரகங்கள்  படிகமாகுகின்றன அல்லது திரவத்திலிருந்து திடப்பொருளாக மாறுகிறது, இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்  என வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் பையர்-இமானுவேல் ட்ரம்ப்லே தெரிவித்துள்ளார்.

இது போல் நமது சூரியனும் 10 பில்லியன் ஆண்டுகளில் படிக வெள்ளை குள்ளகிரகமாகும்.வெள்ளைக் குள்ள நட்சத்திரங்கள் உலோக ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் ஆகியவற்றின் படிகக் கோளங்களாகும் என்பது  முதல் நேரடி ஆதாரம் ஆகும்.

இதுபோல ஆயிரக்கணக்கான நடசத்திரங்கள் படிகங்களாக மாறி வருகின்றன.

Next Story