உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 6 Feb 2019 11:15 PM GMT (Updated: 6 Feb 2019 7:14 PM GMT)

* சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் தரும் விதமாக ஆசிரமம் கட்டப்போவதாக செக் குடியரசு அறிவித்துள்ளது.

* ரஷியா தலைநகர் மாஸ்கோவில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. இதனால் சுமார் 130 கட்டிடங்களில் இருந்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் கிடைக்காததால் அது வெறும் புரளி என தெரியவந்தது

* சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்காவின் போர் விமானங்கள் 48 மணி நேரத்தில் 2 முறை வான்தாக்குதல் நடத்தின.

* அமெரிக்க செனட் சபையில், சிரியா மீதான பொருளாதார தடைகளை நீட்டிப்பதற்கும், அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

* வெனிசூலாவில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த நாடாளுமன்றத்தை அதிபர் நிகோலாஸ் மதுரோவின் ஆதரவுபெற்ற ஆயுத குழு கைப்பற்றும் அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைக்கு செல்வதால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என செனட் சபை உறுப்பினர் கிறிஸ் மர்பி வலியுறுத்தி உள்ளார்.

* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு மார்ச் 31-ந் தேதி முடிவடையும் நிலையில், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை 8 வாரத்துக்கு தாமதப்படுத்த இங்கிலாந்து எம்.பி.க்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story