உலக செய்திகள்

27, 28-ந்தேதிகளில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை ஹனோய் நகரில் நடக்கிறதுஅதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + Trump says summit with Kim to take place in Hanoi

27, 28-ந்தேதிகளில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை ஹனோய் நகரில் நடக்கிறதுஅதிகாரப்பூர்வ அறிவிப்பு

27, 28-ந்தேதிகளில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை ஹனோய் நகரில் நடக்கிறதுஅதிகாரப்பூர்வ அறிவிப்பு
எதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.
வாஷிங்டன், 

எதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இந்த பேச்சு வார்த்தையின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர். இதையொட்டி ஒரு உடன்பாடும் செய்து கொண்டனர். ஆனாலும் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுத்து, முயற்சி மேற்கொண்டார். அதை டிரம்ப் ஏற்றார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை ஆற்றிய டிரம்ப், வியட்நாமில் 27, 28-ந்தேதிகளில் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுகிறேன் என அறிவித்தார்.

இந்த நிலையில், டிரம்ப், கிம் சந்தித்துப் பேசும் 2-வது உச்சி மாநாடு வியட்நாமின் தலைநகரமான ஹனோய் நகரில் நடைபெறும் என டிரம்ப் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், “வடகொரிய தலைவர் கிம்ஜாங் அன்னை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன். இது அமைதிக்கான நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க பொருட்களுக்கு ‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா’ டிரம்ப் சொல்கிறார்
உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா என்று டிரம்ப் பேசினார்.
2. வியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை
வியட்நாமில் நடந்த டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.
3. வடகொரிய அதிபருடனான சந்திப்பு எப்போது? அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை வியட்நாமில் சந்தித்து பேச இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. அரசு அலுவலகங்கள் மூடல் எதிரொலி :அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் வெளிநாட்டு பயணம் ரத்து - டிரம்ப் அதிரடி
அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்டும் விவகாரத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்றம் 5.7 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.40,470 கோடி) அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் கோரி வருகிறார். இதை எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி நிராகரித்து விட்டது.
5. டிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்: ஏற்பாடுகள் தீவிரம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.