உலக செய்திகள்

‘‘டிஜிட்டல் கேங்ஸ்டர் போல் செயல்படுகிறது’’ பேஸ்புக் மீது இங்கிலாந்து நாடாளுமன்றம் காட்டம் + "||" + Facebook cant behave like digital gangster says UK report

‘‘டிஜிட்டல் கேங்ஸ்டர் போல் செயல்படுகிறது’’ பேஸ்புக் மீது இங்கிலாந்து நாடாளுமன்றம் காட்டம்

‘‘டிஜிட்டல் கேங்ஸ்டர் போல் செயல்படுகிறது’’ பேஸ்புக் மீது இங்கிலாந்து நாடாளுமன்றம் காட்டம்
‘‘டிஜிட்டல் கேங்ஸ்டர் போல் செயல்படுகிறது’’ என பேஸ்புக்கை இங்கிலாந்து நாடாளுமன்றம் விமர்சனம் செய்துள்ளது.


அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது.  உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இங்கிலாந்தின் நாடாளுமன்ற குழுவான டி.சி.எம்.எஸ். இது குறித்து விசாரணையை தொடங்கியது. 

18 மாத விசாரணைக்குப் பின் அந்தக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,  ‘‘டிஜிட்டல் கேங்ஸ்டர் போல் செயல்படுகிறது’’ என பேஸ்புக் நிறுவனம் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தை நிறுவியவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் விசாரணையை மந்தமாக்கும் வகையில் செயல்பட்டதாகவும், தவறான தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அத்துடன் இணைய உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் பேஸ்புக் செயல்படுவதாகவும், தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நினைத்துக்கொள்வதாகவும், இதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் கடுமையாக சாடி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு
இங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிக்கப்பட்டது.
2. மின் தடையால் இருளில் மூழ்கிய இங்கிலாந்து நகரங்கள்; போக்குவரத்து பாதிப்பு
மின் தடையால் இங்கிலாந்து நகரங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
3. இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி நீக்கம்
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி நீக்கப்பட்டுள்ளார்.
4. ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், மேத்யூ வேட் சதம் அடித்து அசத்தல்
ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் சதம் அடித்து அசத்தினர்.
5. ஹங்கேரி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.