உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை + "||" + In the United States Indian Shot dead

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் இந்தியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.
வாஷிங்டன், 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்தவர் கோவர்தன் ரெட்டி (வயது 48). தெலுங்கானா மாநிலம் யதாத்ரி மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்ற கோவர்தன் ரெட்டி புளோரிடாவின் பென்சகோலா நகரில் உள்ள பல்பொருள் அங்காடியுடன் கூடிய பெட்ரோல் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பெட்ரோல் நிலையத்தில் கோவர்தன் ரெட்டி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிட்டு தப்பி ஓடினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

இது குறித்து பென்சகோலா நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.