உலக செய்திகள்

அமெரிக்க கல்வித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு + "||" + The bribery of the US academic department - the case of 50 people, including Hollywood actresses

அமெரிக்க கல்வித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு

அமெரிக்க கல்வித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு
அமெரிக்க கல்வித்துறையில் லஞ்ச ஊழல் தொடர்பாக, ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் டெக்சாஸ், தெற்கு கரோலினா, யாலே, ஸ்டான்போர்டு, ஜார்ஜ் டவுன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான லஞ்ச ஊழல் புகார்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்த பல்கலைக்கழங்களில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் உள்பட பல முக்கிய பிரபலங்கள் கோடிக்கணக்கிலான ரூபாயை லஞ்சமாக கொடுத்தது மத்திய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி சான்றிதழ்கள், பொய்யான மதிப்பெண்கள், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் நுழைவுத் தேர்வு எழுதுதல் போன்ற வழிகளில் மோசடிகள் நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக ஹாலிவுட் நடிகைகள் லோரி லவுக்ளின், பெலிசிட்டி ஹாப்மேன் ஆகிய 2 நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான விவகாரம்: கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் சப்–கலெக்டர் நடவடிக்கை
விவசாயி ஒருவரிடம், கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான விவகாரம் தொடர்பாக அந்த கிராம நிர்வாக அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து சப்–கலெக்டர் (பொறுப்பு) சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.
2. மத்திய அரசின் திட்டத்தில் பயன் பெற விவசாயியிடம் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அதிகாரி
மத்திய அரசின் திட்டத்தில் பயன் பெற விவசாயி ஒருவரிடம், கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. உடுமலை அருகே சிறுகுறு விவசாயிக்கான சான்றிதழ் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
சிறுகுறு விவசாயிக்கான சான்றிதழ் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
4. கோவிலில் கூட்டம் நடத்தி ரேஷன்கடை ஊழியர்களிடம் லஞ்சம் வசூல் - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் 3 அதிகாரிகள் சிக்கினர்
கோவிலில் கூட்டம் நடத்தி ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் உள்பட 3 பேர் சிக்கினர்.
5. “லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
“லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும்” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு கருத்தை தெரிவித்தனர்.