பிரேசில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் துப்பாக்கி சூடு: 10 பேர் பலி


பிரேசில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் துப்பாக்கி சூடு: 10 பேர் பலி
x
தினத்தந்தி 14 March 2019 12:26 PM GMT (Updated: 14 March 2019 12:26 PM GMT)

பிரேசில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 மாணவர்கள் உட்பட 10 பேர் பலியாகினர்.

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் உள்ள பள்ளி கூடம் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இதில், 5 மாணவர்கள் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.  20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பள்ளி ஊழியர்கள் 2 பேர், அருகிலுள்ள கடையின் உரிமையாளர் ஒருவர் ஆகியோரும் பலியாகினர்.  இதன்பின் 17 மற்றும் 25 வயதுடைய துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.  இவர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக சாவோ பாவ்லோ மாநில ஆளுநர் ஜோவாவோ டோரியா தெரிவித்துள்ளார்.  

இதேபோன்று மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.  இந்த இரு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த 2011ம் ஆண்டில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் பள்ளி கூடத்தில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.  இதன்பின் பள்ளி கூடத்தில் நடந்த மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இதுவாகும்.

Next Story