உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* சீனாவின் முதல் மிதக்கும் அணு உலைக்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியா மீது மீண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அது பிரச்சினையை மேலும் தீவிரமாக்கும் எனவும், எனவே தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி கொண்டுள்ளது.

* ‘போயிங் 737’ மேக்ஸ் ரக விமானங்களின் மூக்குப் பகுதியில் உள்ள சென்சார் பிரச்சினையே அந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதுக்கு காரணமாக அமைந்திருக்கக் கூடும் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

* இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சுமத்ரா பண்டா அச்சே நகரில் பொது இடத்தில் கைகோர்த்து நடந்து சென்ற 5 ஜோடிகளுக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

* ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அடுத்த மாதம் 26, 27 தேதிகளில் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
* சிரியாவின் குவெய்னிடெரா மாகாணத்தில் குர்ரெம் நகரில் கண்ணிவெடி வெடித்து சிதறியதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
2. உலகைச்சுற்றி...
* இந்தோனேசியாவின் கலிமந்தன் மாகாணத்தில் கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிர் இழந்தனர்.
3. உலகைச்சுற்றி...
* சூடானில், அதிபர் உமர் அல் பசீர் பதவி விலகக்கோரி நடந்து வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
4. உலகைச்சுற்றி...
* சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாப் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசியதில் அப்பாவி மக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
5. உலகைச்சுற்றி...
* பிரெக்ஸிட் நடவடிக்கையை ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.