உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 22 March 2019 10:30 PM GMT (Updated: 22 March 2019 5:00 PM GMT)

* தென்கொரியா-வடகொரியா நாடுகளுக்கான கொரிய தொடர்பு அலுவலகத்தில் இருந்து தமது ஊழியர்களை வடகொரியா திடீரென திரும்பப் பெற்றுள்ளது.

* கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் உள்ள ரஷிய தூதரகத்துக்குள் மர்ம நபர்கள் 2 பேர் கையெறி வெடிகுண்டை வீசி சென்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக கையெறி வெடிகுண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

* நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து அதிநவீன துப்பாக்கிகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தடைவிதித்தார். இதை கண்டித்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

* ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு லாகூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நேற்று அவரது குடும்பத்தினர் அவரை சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

* பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு அதன் நட்பு நாடான சீனா 2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) கடனாக வழங்கி உள்ளது.


Next Story